மீண்டும் இணையும் சூர்யா-ஹரி வெற்றிக்கூட்டணி: ஆனால்…..

சூர்யா-ஹரி கூட்டணி இதுவரை சோடை போனதில்லை என்பது ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களின் வெற்றியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இம்முறை இவர்கள் இணைவது ‘சிங்கம் 4’ படத்திற்கு இல்லையாம்

சூர்யாவுடன் மிக விரைவில் ஒரு படத்தில் இணையவுள்ளேன் என்பது உண்மைதான். இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. ஆனால் இந்த படம் சிங்கம் படத்தின் 4ஆம் பாகம் அல்ல. ஆறு, வேல் போல் ஒரு வித்தியாசமான கதைக்களம்’ என்று ஹரி கூறியுள்ளார்.

ஹரி தற்போது விக்ரம், த்ரிஷா நடிக்கவுள்ள ‘சாமி 2’ படத்தின் பணியிலும், சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பணியிலும் பிசியாக உள்ளனர். இருவரும் அவரவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணியை முடித்தவுடன் அடுத்த வருட இறுதியில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.