பிரபல இயக்குனர் விஜய் இயக்கிய தேவி திரைப்படத்தில் முதன்முறையாக பிரபுதேவா, தமன்னா ஜோடி சேர்ந்து நடித்தனர். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளது. இவர்கள் இணையவுள்ளது ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சியில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் இன்று மும்பையில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரபுதேவா, தமன்னா இணைந்து ஒரு நடனம் ஆடவுள்ளனர். இதற்காக அவர்கள் கடந்த சிலநாட்களாக பயிற்சி எடுத்ததாக கூறப்படுகிறது

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ஹிருத்திக் ரோஷன், ரிஷி தவான் ஆகியோரும், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ப்ரினீதி சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டு நடனம் ஆடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.