வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22

ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

04:02 மணி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் மும்பை தாராவி போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட் பணி முடிவடைந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தொடங்குகிறது.

இந்த நிலையில் இன்று செட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் போது ஏணி ஒன்றை ஊழியர் ஒருவர் தூக்கி கொண்டு வந்தார். அப்போது அவர் நடந்து வந்த பாதையில் இருந்த மின்வயரை மிதித்தார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் படக்குழுவினர்களும் செட் அமைக்கும் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பலியான ஊழியர் பெயர் மைக்கேல் என்பதும் அவருடைய மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393