சமீபத்தில் கேரளத்தை புரட்டி போட்ட வெள்ளம், மழை, நிலச்சரிவு போன்றவை அம்மாநில மக்கள் எதிர்பார்த்திராத வகையில் மக்களை நிலை குலைய வைத்தது.பலர் வீடு வாசல்களை இழந்து வாடி வருகின்றனர் முகாம்களில் தங்கி இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பல மாநிலங்களும் நிவாரண நிதிகளை கோடிகளில் கொடுத்து வருகின்றனர். நிதிகள் அதிகரித்தாலும் அது நிவாரணப்பணிகளை செயல்படுத்த போதுமானதாக இல்லை அதனால் கேரள மக்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை அரசுக்கு கொடுத்து உதவும்படி முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.