அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

amala paul

பிரபல நடிகை அமலாபால் நடனப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டது தெரிந்ததே

இந்த நிலையில் இதே விவகாரத்தில் இன்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்த மலேசிய நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தான் இன்று கைது செய்யப்பட்டவர்.

கைது செய்யப்பட்ட பாஸ்கர் என்பவரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒருசிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.