அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் இன்னொரு பிரபல வில்லன்

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தில் பிரபல பாலிவுட் ஸ்டார் விவேக் ஓபராய் நடித்து வருகிறார் என்பதும் அவர் தற்போது அஜித்துடன் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வில்லன் கேரக்டரில் பிரபல நடிகர் ஆரவ் செளத்ரி நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் மகாபாரதம் தொலைக்காட்சி சீரியலில் ‘பீஷ்மர்’ வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘விவேகம்’ கிளைமாக்ஸ் காட்சியில் விவேக் ஓபராய், ஆரவ் செளத்ரியுடன் அஜித் ஆக்ரோஷமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

‘விவேகம்’ படத்தில் நடித்து வருவதை தனது டுவிட்டர் பக்கத்தில் ஆரவ் வீடியோ ஒன்றை பதிவு செய்து உறுதி செய்துள்ளர். அந்த வீடியோவில் அவர் தங்கியிருக்கும் விடுதியை சுற்றிலும் பனி சூழ்ந்த மலைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.