சம்மர்கு ஜில்லுனு ஜூஸ் குடிச்சிட்டு, ஹாயா படுத்தபடி ரிலாக்சா ஆன்லைன் ஷாப்பிங் செய்றது ஒரு தனி சுகம் தான்! எல்லா ஆன்ராயட் ஸ்மார்ட் மொபைலிலும் இன்-பில்ட் ஆகவே வந்துடுச்சு இந்த ஆன்லைன் கடைகள். டிஸ்கவுன்ட் ஆஃபர்னு ஆசையா வாங்க போய் பல சமயங்கள்ல, பொருட்களை வாங்குவதை விட அதைப் பார்க்கிறதுக்காக நாம செலவிடும் நேரம் அதிகம், செலவிட்ட நேரத்துல திருப்தியா வாங்கினோமானா சந்தேகம்தான். உபயோகமா ஆன்லைன் ஷாப்பிங் செய்ய சில டிப்ஸ்…..

1. என்ன வாங்க போறீங்க…

ஆன்லைன் ஷாப்பிங் செய்றதுக்கு முன்ன, என்ன வாங்கப் போறீங்கன்றத ஒரு தெளிவான லிஸ்ட் போட்டுக்கோங்க. இது முக்கியமானது. உதரணமா, குர்தி, ஜீன்ஸ், புடவை… லிஸ்ட் போட்ட பிறகு உங்க ஷாப்பிங் லிஸ்ட் இன்னும் கூர்மையாக்குறது சிறப்பா ஷாப்பிங் செய்ய உதவும். அதாவது கருப்பு காட்டன் குர்தி, ப்ளூ டெனிம் ஜீன்ஸ், சிவப்பு பட்டு புடவை. நீங்க வாங்க போற பொருளோட படம் இருந்தாலும் இன்னும் சிறப்பு.

2. பட்ஜெட் என்ன…

500 ரூபாய்க்கு வாங்கலாம்னு நெனச்சு 2000 ரூபாய்க்கு வாங்கின அனுபவம் நம்மில் பல பேர் சந்திச்சிருப்பீங்க. பட்ஜெட் நிர்ணயம் செஞ்சுகிறது ஆன்லைன் ஷாப்பிங்ல அடுத்து செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். உதாரணமா, ஒரு பார்டி வேர் வாங்க போறீங்கனு வெச்சுகுவோம், என்ன விலைக்குள்ள இருக்கணும்னு நிர்ணயம் செஞ்சுகோங்க பிறகு பாய்ன்ட் நம்பர் 1 மனசுல வெச்சு ஷாப்பிங் செய்ங்க. பெரும்பாலான ஆன்லைன் பொருட்களில் காட்டப்படுவது போல் உடை இருப்பதில்லை, இதற்கு காரணம் நீங்கள் தேர்வு செயத துணி வகையாக இருக்கலாம்.

3. டிக்…டிக்…டிக்…

அதிக நேரம் ஆன்லைன் ஷாப்பிங் செலவிடாம இருக்க இந்த டிப்ஸ் உதவும். உங்க மொபைல் டைமர் அல்லது அலாரம் செட் பண்ணிகோங்க, அதிகபட்சம் ஒரு மணி நேரம் அதுக்கு மேல நோ நோ… ஸ்டாப்! இந்த டிப்ஸ் மிகவும் யூஸ்ஃபுல்லும் கூட. இந்த டெக்னிக் நாம வெளியில் ஷாப்பிங் செய்யும் போது கடைப்பிடிக்கலாம்.

உங்களோட ஷாப்பிங் டெக்னிக் என்னென்ன? டூ ஷேர் வித் அஸ்….