தமிழ்த்திரைப்படம் ஒன்று ஒரே ஒரு நடிகை மட்டுமே நடித்த படம் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு ‘பிரன்னா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் உருவாகி வரும் இந்த படத்தை விகே பிரகாஷ் என்பவர் இயக்கியுள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் எபெக்ட் செய்துள்ளார்.

அந்த ஒரே ஒரு நடிகை நித்யாமேனன் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.