தமிழ் சினிமாவில் இலைமறை காய்மறையாக வார்த்தைகள் பயன்படுத்தி வந்ததுண்டு. நாம் பெரிதும் ரசிக்கும் பாடல்களில் கூட அந்த காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை சில வார்த்தைகள் இலைமறை காய்மறையாக ரசிக்கும் விதத்தில் பாடல்களாக எழுதப்பட்டு வந்ததுண்டு.

நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி வந்துவிட்டாலே இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் இருக்காது என்ற பெயரும் கூட அவருக்குண்டு.இதையெல்லாம் கூட அவர் எல்லை மீறாத வகையில்தான் செய்தார்.

இதையும் படிங்க பாஸ்-  3 வருட நிறைவு விழாவை கொண்டாடிய த்ரிஷா இல்லனா நயன் தாரா டீம்

கவர்ச்சிப்படங்கள் என கமல்ஹாசனின் மன்மத லீலை, பாக்யராஜின் சின்ன வீடு, கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனம் என பார்த்திபனின் உள்ளே வெளியே என நிறைய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்தது உண்டு.

இவை எல்லாம் எல்லை மீறாமல் அளவோடு இருந்த படங்கள்.சொல்லப்போனால் எல்லோருமே குடும்பத்தோடு சென்று தியேட்டரில் சென்று பார்த்த படமாக இது இருந்திருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படம்- காதலை தேடி நித்யானந்தா

ஆனால் தற்போது வரும் த்ரிஷா இல்லனா நயன் தாரா, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹர மஹா தேவகி போன்ற திரைப்படங்கள் இரட்டை அர்த்தம் என்ற பெயரில் நேரடி வசனங்களை பேசி பல சினிமா ரசிகர்களை வேதனைப்படுத்தி வருகின்றனர்.

இதுபோல விஷயங்களுக்காக சில சீனியர் இயக்குனர்கள் வருத்தப்பட்டு பேட்டி கொடுத்திருந்தது எல்லாம் அறிந்ததே.

இதையும் படிங்க பாஸ்-  நாளை வெளியாகும் முத்துராமலிங்கம்!!!

இந்த நிலையில் நேற்று வெளியான ஒண்ணுபோதும் நின்னு பேசும் என்ற படத்தின் டீசர் முதலில் வெறும் கறுப்புத்திரையாக வெறும் ஆபாச வார்த்தையுடன் ஆரம்பமாகிறது.

இரட்டை அர்த்தம் என நினைத்துக்கொண்டு இது போல தரமிழந்த வார்த்தைகளை உபயோகம் செய்வதால் தமிழ் சினிமாவின் தரமும் போய்விட்டதாக சினிமா மீது தீவிர மோகம் கொண்ட சினிமா ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்