ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் சமுத்திரக்கனியின் ஆகாச மிட்டாயி

தமிழில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற படம் அப்பா. அதிக காசுக்கு ஆசைப்படும் கல்வி நிறுவனங்கள் அங்கு நடக்கும் கொடுமைகளையும் இப்படத்தில் கடுமையாக சாடியிருந்தார் இயக்குனர் சமுத்திரக்கனி.

நகைச்சுவை மற்றும் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் தம்பி ராமையா நடித்து இருந்தார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த சமுத்திரக்கனி இப்படத்தை மலையாளத்தில் ஆகாச மிட்டாயி என்ற பெயரில் இயக்கினார். தமிழில் சமுத்திரக்கனி நடித்த பாத்திரத்தில் மலையாளத்தில் ஜெயராம் நடித்துள்ளார். தம்பி ராமையா கதாபாத்திரத்தில் கலாபவன் சாஜன் நடித்துள்ளார்.கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணமன்று இப்படம் வெளியாகவுள்ளது.