OPS
OPS

அதிமுகவில் இணையுமாறு டிடிவி தினகரனை நான் அழைக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் “பிரிந்து சென்றவர்கள் அனைவரும் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்ப வேண்டும்” எனக்கூறினார். அப்போது “இது தினகரனுக்கான அழைப்பா?” என செய்தியாளர்கள் கேட்க, இது அனைவருக்கும் பொருந்தும் என ஓ.பி.எஸ் பதில் கூறினார். எனவே, தினகரனை அதிமுகவில் இணையுமாறு ஓ.பி.எஸ் அழைத்ததாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

இந்நிலையில், இதுபற்றி ஓ.பி.எஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் “டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல். 18 எம்.எல்.ஏக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர். அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.