நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அஜித்துக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், தனக்குதெரியாமல் அந்த வாழ்த்து பதிவாகிவிட்டதாகவும் அஜித்துக்கு தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர்  அஜித்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் வெற்றியும் இனிவரும் காலத்தில் கிடைக்க அஜித் குமாரை வாழ்த்துகிறேன் என்று ஓபிஎஸ் தனது டுவீட்டில் கூறியுள்ளார்.
ஆனால் இவர், அமைச்சர் செங்கோட்டையன் போல் தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று மறுப்பு கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது