ஒரு பாடலில், ஒரு முறை கண் சிமிட்டி பிரபலம் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் நடித்துள்ள ‘ஒரு அடார் லவ்’ படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது.

பள்ளி மாணவர்களின் காதலை சொல்லும் இப்படம், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

இப்படத்தில் பிரியா வாரியரும் , படத்தில் ஹீரோவாக நடிக்கும் ரோஷன் அப்துல்லாவும் லிப்லாக் முத்தம் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் ஸ்னீக் பீக் வீடியோவாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒமர் லுலு இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் வாங்கி வெளியிடுகிறார்.