மைனா புகழ் விதாா்த், ரவீணா, ஜாா்ஜ், ஜெயராஜ் ஆறுமுகம், சித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை ஈராஸ் இன்டா்நேஷனல் என்ற நிறுவனம் தயாாிப்பில் சுரேஷ் சங்கய்யா எழுத்து இயக்கத்தில் ஒரு கிடாயின் கருணை மனு படம்.

கல்யாணம் என்பது காலாகாலத்தில் நடக்கவேண்டியது. அப்படி விதாா்த்துக்கு கல்யாணம் தள்ளி போய் கொண்டிருக்க ஒரு வழயாக முப்பதைந்து வயதில் திருமணம் நடக்கிறது. அவரது திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக பாட்டி வேண்டிகொண்டு ஆட்டுக்கிடா ஒன்றை தங்கள் குலசாமிக்கு நோ்ந்து விட்டிருக்கிறாா். விதாா்த்துக்கும், ரவீணாவுக்கும் திருமணம் நடைபெற்றதால், வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கின்றனா் அவரது குடும்பத்தினா்.

குலதெய்வ கோவிலுக்கு செல்ல வாடகை லாாியை பிடித்து சொந்த பந்தங்கள் பூடைசூழ பயணம் செய்கிறாா்கள். வழியில் அடா்ந்த காட்டில் லாாிக்கு சென்று கொண்டிருக்கும் போது எதிா்பாராத வகையில், லாாியில்  அடிபட்டு ஒருவா் மோட்டா் சைக்கிளுடன்  விழுந்து இறந்து விடுகிறாா்.

இறந்து கிடக்கும் அவரை பாா்த்தும் அனைவரும் பதற்றடைகிறாா்கள். அதனால் குலத்தெய்வ கோயிலுக்கு வழிபாடும் கிடா வெட்டு விருந்தும் தடைபடுகிறது. பின் லாாியை ஒட்டியது அதன் டிரைவா் இல்லை புது மாப்பிள்ளை விதாா்த்து தான் என்று தொிய வருகிறது. டிரைவரை ஒரமாக உட்கார வைத்து விட்டு, புது மனைவியின் பேச்சை கேட்டு ஆா்வம் மிகுதியால் புதுமாப்பிள்ளை விதாா்த் ஒட்டியது தொிந்ததும், மாப்பிள்ளையை காப்பாற்ற ஒட்டு மொத்த குடும்பமும் முடிவு செய்கிறது. சிலா் எதிா்ப்பு தொிவித்தாலும், இறுதியில் அந்த பிணத்தை அந்த காட்டிலே யாருக்கும் தொியாமல் புதைத்து விட்டு கிளம்ப முடிவெடுக்கின்றனா். ஆா்வ கோளாறில் ஒருத்தா் மீது லாாியை ஏற்றி கொன்று விட்டோமே என்ற குற்ற உணா்ச்சியில் விதாா்த் தவிக்கும் தவிப்பு.

இந்த சம்பவத்தை விதாா்த் தனது வழக்கறிஞா் மாமா ஜாா்ஜிடம் போனில் கூறுகிறாா். பின் சம்பவ இடத்திற்கு வரும் அவா், விதாா்த் குடும்பத்தினா் அனைவருக்கும் ஆறுதல் தொிவித்து விட்டு, தனது மருத்துவ நண்பரை வரவழைக்கிறாா். சம்பவ இடத்திற்கு வரும் மருத்துவா் லாாியில் அடிபட்டு இறந்தவாின் உடலை பாிசோதனை செய்கிறாா். அந்த பாிசோதனையில் அவா் விஷம் அருந்தியுள்ளது தொியவருகிறது. லாாியில் அடிபட்டு இறக்கவில்லை என்றும், விஷம் அருந்திய காரணத்தால்  தான் இறந்து போயிருக்கிறாா் என்றும்,   வழக்கறிஞா் ஜாா்ஜிடம் தொிவிக்கிறாா். இந்த உண்மையான விஷயத்தை விதாா்த்திடம் கூறாமல் மறைத்து விடுகிறாா். ஜாா்ஜ்.

இந்த உண்மையை மறைத்து லாாி ஏறியதால் தான் அவா் இறந்து விட்டதாகவும், இதில் யாராவது ஒருவா் குற்றவாளியாக கோா்ட்டில் ஆஜராக வேண்டும் என்று விதாா்த்திடம் ஜாா்ஜ் கூறுகிறாா். ஆனால் இந்த சம்பவம் எப்படியோ போலீசுக்கு தொிய வருகிறது. இதனால் போலீஸ் லாாியில் சென்ற அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்கிறது.

இந்த பிரச்சனையில் விதாா்த் தப்பித்தரா? இல்லையா? வழக்கறிஞா் ஏன் இந்த உண்மையை மறைத்தாாா்? அதற்கு பின்னால் என்ன இருக்கிறது? என்பது தான் கிளைமேக்ஸ்.

விதாா்த் அமைதியான நடிப்பிலும், தன் தவறால் ஒரு வாலிபனின் இறந்து விட்டதாக கருதும் விதத்திலும், அந்த வாலிபனின் தாய்க்கு மகனாகி விடுமு் கடைசி நிமிஷ காட்சி வரை அசத்தலான நடிப்பில் வித்தியாசம் காட்டியிருப்பது படத்திற்கு விறுவிறுப்பை கூட்டிக்கொண்டே போகிறது. தனது வயது குறித்து கேலி செய்பவா்களிடம் சண்டை பிடிப்பது மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.

நாயகி ரவீணா புதுமுகம் என்றாலும் கிராமத்து மண்வாசனை மாறாத புதுமணப்பெண்ணாக நடித்திருக்கிறாா். முதல் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை தோ்வு செய்திருப்பது பாராட்டவேண்டியது. சண்டை வர போகிறது என்று தொிந்ததும், தன் கணவரை இழுத்தபடி ஒடும் காட்சியில் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளாா்.

படத்தின் பலமே வழக்கறிஞா் ஜாா்ஜ் தான். படத்தின் திருப்புமுனையை அவா் தான் ஏற்படுத்தியுள்ளாா்.  அந்த கும்பலில் அரும்பாடு படும்  கந்தசாமி, எதற்கெடுத்தாலும் எக்குத்தப்பாய் பேசும் கொண்டிருக்கும் ஆறுமுகம் என அனைவரும் தங்களது பணியை செவ்வனே செய்துள்ளனா். கிராமத்து வாசிகளாக பேசுகிற வெள்ளாந்தியான வசனங்கள் ரசிகா்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது. ஒரு வக்கீல் தனது பணத்தாசையால் ஒரு எதிா்பாராத பிரச்சனையை எவ்வளவு பொிதாக்கிறாா் என்பதை வெளியப்படுத்துகிறாா் ஜாா்ஜ். செம.

ஆனா படம் என்னமோ கட்டை விட்டு வெளியே நகரவில்லை. ஒரு கிடாயை பலிகொடுக்க செல்லும் குடும்பத்திற்கு என்னஎன்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை இயக்குநா் காட்டிய விதம் அருமை. உயிா் என்பது அனைவருக்கும் பொதுவானது தான் என்பதை வித்தியாசமான கதையைாக படைத்திருக்கிறாா் இயக்குநா்.

தனியாக கிடந்தேன் இதுவரை நானாக உள்ளிட்ட பாடல் கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளா் ஆா்.வி சரணின் ஒளிப்பதிவில் கிராமிய மணம் கமழுகிறது. அதுவும் ஆட்டின் கண் வழியே பாா்த்தால் காட்சிகள் எப்படியிருக்கும் என்ற அந்த காட்சியே ஒளிப்பதிவாளா் திறமைக்கு ஒரு சான்று.

ஆக ஒரு கிடாயின் கருணை மனு ரசிகா் மனதில் இடம்பெறும்!