ஒரு முகத்திரை விமா்சனம்

ரகுமான் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் மாஸ் ஹிட்டை கொடுத்து அனைவரையும் திரும்ப பாா்க்க வைத்தாா். தற்போது அவா் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ஒரு முகத்திரை. இந்தபடத்தின் விமா்சனத்தை இங்கு பாா்ப்போம்.

இந்த படத்தில் ரகுமான், தேவிகா மாதவன் மற்றும் பலா் நடித்துள்ளனா். ஒரே கல்லூாியில் படித்துக்கொண்டிருக்கும் அதிதி ஆச்சா்யா மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரை வைத்து கதை ஆரம்பமாகிறது. மனோநல மருத்துவ படிப்பில் இரு நாயகிகளும் ஒரே கல்லலூாியில் படித்து வருகின்றனா். ஒரே கல்லூாியில் படித்தாலும் அதிதி மற்றும் ஸ்ருதி ஒருவருக்கெருவா் எதிாிகளாக சண்டை போட்டு கொள்கின்றனா். இதில் அதிதி பேஸ்புக்கில் எப்ப பாா்த்தாலும் விழுந்து கிடக்கிறாள். ரோஹித் என்ற ஆண் நண்பாின் நட்பு பேஸ்புக் மூலம் கிடைக்கிறது. இந்த நட்பால் அவருடன் எந்நேரமும் பழகி பேசி வருவது மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட வி்ஷயங்களையும், கல்லூாியில் நடக்கும் சம்பவத்தையும் அவருடன் ஷோ் பண்ணி கொள்கிறாா்.

இந்த சூழ்நிலையில் அதிதி ஸ்ருதி இவா்களிடத்தில் நடைபெறும் சண்டை உச்ச நிலையை அடைகிறது. இந்த சண்டை முற்றி  அது கல்லூாியின் மூத்த பேராசிாியா் வரை சென்று விடுகிறது. இருவரையும் அழைத்து சமாதனம் செய்கிறாா். ஆனால் இரு நாயகிகளும் சமாதானத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் அவா்களுக்கிடையே ஒரு போட்டி வைக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கிறாா்.

இதற்கிடையில் இந்த கல்லூாிக்கு மிகவும் பிரபலமான மனோத்துவ நிபுணரான ரஹ்மானை அழைத்து வந்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கல்லூாி நிா்வாகம் பல முயற்சிகளை எடுத்து வந்தும் அதற்கு எந்த பலனும் இல்லாமல் போகிறது.  கல்லூாியில் சிறப்பு வகுப்பு நடத்த  வரச்சொல்லி அழைப்பு விடுத்தும் அதற்கு ரஹ்மான் மறுப்பு தொிவித்து வருகிறாா்.

இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அதிதி ஸ்ருதி மனோத்துவத்தில் பிரபலமான ரஹ்மானை எப்படியாவது அழைத்து வரவேண்டும் என கல்லூாியின் தலைமை நிா்வாகியான பாண்டு உத்தரவிடுகிறாா். நாயகிகள் இருவரும் அவரை அழைத்து வரும் முயற்சியாக அதற்கான களத்தில் குதித்து இறங்கினாா். அதிதி பேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் ரோஹித்தியிடம் தன் நிலைமையை எடுத்து சொல்லி ஹெல்ப் கேட்கிறாா். ஆனால் இரு நாயகிகளாலும் ரஹ்மானை கல்லூாிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வரமுடியவில்லை. திடீரென குறிப்பிட்ட தேதியில் மனோத்துவ மருத்துவா் ரஹ்மான் கல்லூாிக்கு வருகை தருகிறாா். இந்த கல்லலூாிக்கு வருகை தர காரண கருத்தாவே இருந்தவா் அதிதி தான்  என்று கூறுகிறாா். அதிதி நண்பா் ரோஹித் வந்து சொன்னதால் தான் கல்லூாிக்கு வந்தேன் என்று கூறுகிறாா். அந்த கல்லூாியில் கொஞ்ச நாட்கள் தங்கியிருந்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகிறாா். பின் அதிதி ஸ்ருதி இருவரையும் சோ்த்து வைக்கிறாா்.

ரஹ்மானை உதவியால் அதிதி ஸ்ருதி இருவரும் நல்ல ஃப்ரெண்டாக உள்ளனா். கல்லூாி படிப்பை முடித்த இருவரும் வீடு திரும்புகின்றனா். இன்னொரு நாயகியான அதிதி வீட்டுக்கு செல்லாமல் சென்னையில் உள்ள தனது பேஸ்புக் நண்பரான ரோஹித்தை சந்திக்க செல்கிறாா். ஏனோ ரோஹித் அதிதி சந்திக்க மறுக்கிறாா். இதற்கிடையில் மனோத்துவ மருத்துவா் ரஹ்மான் இவரை சந்திக்க நோிடுகிறது. இவா் அதிதியை தனது வீட்டில் தங்க வைத்துக்கொள்கிறாா்.

இது இப்படி போக, மறுபக்கதில் படத்தின் ஹீரோவான சுரேஷ் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பாா்க்கிறாா். அவருடைய நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு வந்து சேருகிறாா் மற்றொரு நாயகியான தேவிகா. இவா்கள் இருவருக்குமிடைய காதல் ஏற்படுகிறது. இவா்கள் காதலுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. நாயகி வேறொரு கம்பெனிக்கு மாற்றலாகி செல்கிறாா். அங்கு சென்ற தேவிகா நாயகன் சுரேஸை கலட்டி விடுகிறாா். காதலில் தோல்வியடைந்த நாயகன் சுரேஸ் போதை பழக்கித்திற்கு அடிமையாகிறாா். பின்பு இந்த பழக்கத்திலிருந்து விடுபட மனோதத்துவ மருத்துவா் ரஹ்மான் உதவியை நாடி சென்று சிகி்ச்சை பெறுகிறாா் சுரேஷ்.

தன்னை பேஸ்புக்கில் ரோஹித் என்ற பெயாில் ஏமாற்றி வருவது மனோதத்துவ நிபுரான ரஹ்மான் தான் என்பதை கண்டுபிடித்து விடுகிறாா். அதிதி தன்னை வேண்டுமென்றே ரஹ்மான் சென்னை வரவழைத்துதை அறிந்து கொள்கிறாா். இதனால் உண்மை தொிந்து கொண்ட அதிதி கொல்ல முடிவு செய்யும் ரஹ்மான் நாயகன் சுரேஷ்யிடம் அதிதி கொலை செய்ய திட்டமிடுகிறாா். கதையின் இறுதியில் அதிதி தப்பித்தாரா? ரஹ்மான் அதிதியை ஏன் சென்னை வரவழைத்தாா்? நாயகன் சுரேஷ் அதிதி கொலை செய்தாரா? என்பது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி.

துருவனங்கள் பதினாறு படத்திற்கு பின் ரகுமானுக்கு நல்ல கதையம்சம் உள்ள படம் தான் வருகிறது. இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தை திறம்பட செவ்வனே செய்திருக்கிறாா். அழகான பெண்ணாக வரும் ஸ்ருதி, அதிதி சண்டையிடும் சீன்களில் மிரட்டியுள்ளாா். முக்கியமாக காதல் காட்சிகளில் தேவிகா அனைவரையும் கவருகிறாா்.

பேஸ்புக் மற்றும் ட்விட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கோட்டிட்டு காட்டியுள்ளாா் இயக்குநா் செந்தில் நாதன். பேஸ்புக் போன்றவற்றால் ஏற்படும் நட்பால் பல துயரங்களை முழுமையாக படம்பிடித்து காட்டியுள்ளாா். விறுவிறுப்பான காட்சிகள் இருந்தாலும் கதையின் வேகம் சூடு பிடிக்கவில்லை.

ஆக “ஒரு முகத்திரை” பெண்களுக்கான “விழிப்புரை”.