கருப்பன் படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். அவருடன் கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இந்தபடத்தில் சில அரசியல்வாதிகள் வயிறெரிவது போல சில பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே படங்களில் எல்லாம் தற்போதைய தமிழக அரசியல் களம் பற்றிய கருத்துகள் தொடா்ந்து இடம் பெற்று வருவதும் அதுவும் இல்லாமல் பிரச்சனைகளையும் சந்தித்தும் வருவது நாம் அறிந்ததே. அதனால் இயக்குநா் எந்தவித பாரபட்சம் பார்க்காமல் அந்த வசனங்களை எல்லாம் சென்சார்டு போர்டு கட்டு பண்ணுவதற்கு முன் அதை எல்லாம் கத்தரித்து விட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் சேதுபதி , தனுஷ் படங்களுக்கு தடை ! – ஹைதராபாத் நீதிமன்றம் அதிரடி !

இதில் என்னவென்றால் படத்தில் நடிக்கும் போது இப்படியான டயலாக்குகள் இருக்கும் பட்சத்தில் அதை பற்றி பேசும் பின்னாடி பிரச்சனைகள் வரும் என யோசிக்கவில்லையா நடிகா் விஜய் சேதுபதி. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, மனுசன் எப்படி பக்குப்பட்டவா் என்பது அவரது பதிலிருந்து தெரிகிறது. அப்படி என்ன தான் பதில் அளித்தார் தெரியுமா? எப்போதும் போல தான் சகஜமாக தான் பேசியிருந்தேன். சத்தியமாக தெரியாது. அந்த வசனம் அடுத்தவா்களின் மனசு புண்படும் என்றால் பேசியிருக்கவே மாட்டேன் என்று வெளிப்படையாக கூறினார். மேலும் கவுதம் கார்த்திக் இவருடன் சோ்ந்து நடித்த அனுபவத்தை பற்றி, விஜய் சேதுபதி அண்ணனை ரசிக்கிறதும், அவருடைய அட்வைஸ் கேட்டுக்கிறதும் தான் என்னுடைய முதல் வேலையாக இருந்தது. எனக்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று கேட்டு கேட்டு இன்னும்
அதிகப்படுத்திக்கொண்டேயிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  சீதக்காதி படத்தின் எட்டு நிமிட சிங்கிள் ஷாட்டுக்காக சூர்யா வெயிட்டிங்

நான் ரொம்ப கொடுத்து வச்சவன் இப்படியொரு அண்ணன் எனக்கு கிடைக்க என்று மனநெகிழ்ந்து சொன்னார் கவுதம் காரத்திக். அதுபோல வீட்டில் நான், அப்பாவுடன் இருக்கும் போது அதிகம் பேசிகிற நடிகா் விஜய் சேதுபதி தான். மேலும் அப்பா பார்க்க ஆசைப்படுகிற நடிகா் என்றால் அது நம்ம விஜய் சேதுபதி அண்ணன் தான். இப்படி எல்லாருடைய மனத்தை கவரக்கூடிய வகையில் இருக்கும் விஜய் சேதுபதியிடம் தான் நாம் அந்த கலையை கற்று தெரிந்து கொள்ள வேண்டும்.