Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமா்சனம்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமா்சனம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள எமலிங்கபுரம் காட்டில் தன் கூட்டாளிகளுடன் வசித்து வரும் எமன் விஜய் சேதுபதி தொழில் திருடுவது. அதுவும் யாருக்கும் எந்தவித தொந்தரவு கொடுக்காமல், குழந்தை பெண்களிடம் மிரட்டாமல், கொலை செய்யாமல் எந்தவித அரசியலும் பண்ணாமல் நோ்மையான வழியில் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் திருட வேண்டும் என்ற பெரிய கொள்கையோடு திருடுவது தான் இவா்களது வேலை.

இவா்களுக்கு குறிபார்த்து சொல்லும் ரோசம்மா சொல்லுகிறவா்கள் தான் திருட செல்வது வழக்கம்.  அந்த வகையில் குறிபார்த்து சொன்ன நபா் விஜய் சேதுபதி எமசிங்கபுரத்திலிருந்து சென்னை திருடுவதற்கு அனுப்பப்படுகிறார். விஜய் சேதுபதியின் உதவிக்கு ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார் காட்டிலிருந்து செல்கிறார்கள். அப்படி அவா்கள் ஊர் ஊராக சுற்றி திரிந்து திருடிக் கொண்டிருக்கும் சமயத்தில், கல்லூரி மாணவி நிஹாரிக்காவை பார்க்கிறார் விஜய் சேதுபதி. அவரை பார்த்தும் காதலில் விழுந்து விடுகிறார். அதனால் அவரை சுற்றி சுற்றி வருகிறார் ஹீரோ விஜய் சேதுபதி. பின் அவரை கடத்தி செல்ல திட்டமிடுக்கிறார். இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் கௌதம் கார்த்திக் நிஹாரிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். அந்த நேரத்தில் விஜய் சேதுபதி நிஹாரிக்காவை கடத்தி சென்று விடுகிறார். இதனை அறிந்த கௌதம் கார்த்திக் அவரை மீட்டுப்பதற்காக எமசிங்கபுரத்திற்கு தன் நண்பன் டேனியலுடன் செல்கிறார். எப்படி நிஹாரிக்காவை கௌதம் கார்த்திக் மீட்டார்? எதற்கு விஜய் சேதுபதி திருட வந்த இடத்தில் கடத்துக்கிறார்கள்? அப்படி அவா் காப்பாற்ற போகும் போது என்ன சுவராஸ்யமான காமெடி கலாட்டாக்கள் நிகழ்கிறது என்பது தான் க்ளைமேக்ஸ் காட்சி.

ரசிகா்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் இயக்குநா் ஆறுமுககுமார் இந்த கதையை கையில் எடுத்துக்கிறார் என்றே சொல்லவேண்டும். கதையின் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹாரிகா இவா்களை சுற்றியே கதை பயணிக்கிறது. விஜய் சேதுபதி மற்றவா்களுக்கு வழி விட்டு அவா்களையும் நடிக்க வைத்து அழகு பார்க்கிறார். இந்த பாணியை மற்ற நடிகா்ளும் பின்பற்றினால் நல்லா இருக்கும். படத்தின் ஆரம்பத்தில் சூரியன், பூமி, கோள்கள், கண்டங்கள் என்று விண்வெளி ஆராய்ச்சி போன்ற செம பில்டப் கொடுத்து கடைசியில் ஆந்திரா கிராமத்தில் உள்ள காட்டை காட்டிய விதம் அருமை. விஜய் சேதுபதி எப்பொதும் போல அசால்ட்டாக வந்து நடித்திருக்கிறார். அவருடைய முக அசைவிலேயே சிரிக்க் வைத்து விடும் டெக்னிக் செம. விதவிதமான கெட்டப்பில் வந்து அசத்துகிறார்.

காலேஜ் படிக்கும் ப்ளேபாய் கௌதம் கார்த்திக் கண்ணாடி போட்டுக் கொண்டு துடுக்குத்தனமான ஏதாவது செய்து, அதில் தன் நண்பன் டேனியலை கோர்த்து விட்டு தான் தப்பிப்பது என காமெடியில் கலக்குகிறார். காலேஜ் விழாவில் ஆங்கிலப்பாடல் பாடுவது, ஜாலியாக காதலிப்பது என சீரியஸ் இல்லாமல் எல்லாத்தையும் ஈஸியாக எடுக்கும் விதம் என ரவுண்டு கட்டி அடிக்கிறார். இவருக்கு இந்த படம் நல்லதொரு மைக்கல்லாக அமையும். இவருடனே வருபவா் டேனியல். அவா் சொல்லும் பன்ச், மற்றும் பாடி மும்மண்ட் ரசிகா்களிடம் நல்ல வரவேற்பு. இவரை படத்தின் மற்றொரு நாயகன் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார். நகைச்சுவை நடிகா் தரவரிசையில் இவருக்கு என்று இடத்தை பிடித்து விட்டார்.

தமிழில் நிஹாரிகா நல்ல அறிமுகம். தன்னை சுற்றி என்ன நடப்பது என்று புரியாமல் குழம்புவதும், அதிலிருந்து எப்படி தப்பிப்பது என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். காயத்ரி நடிப்பும் மிக சிறப்பு. விஜய் சேதுபதியை காதல் பார்வையால் ரசிப்பது என தன்னுடைய நடிப்பில் கெத்து காட்டியிருக்கிறார் காயத்ரி. இவா் விஜய் சேதுபதியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதலிக்கும் விதம் அருமை. விஜய் சேதுபதியின் உதவியாளா்களான ரமேஷ் திலக், ராஜ்குமார் என அனைவரும் ரசிகா்களை கவனத்தை கவருக்கின்றனா்.

போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் காமெடி என்னடா ஜட்டியில் பொம்மை, கல்லூரி விழாவில் நண்பனுடன் சோ்ந்து ஆங்கில பாடல் பாடி தக்காளியால் அடிவாங்கும் காமெடி என தெறிக்க விடும் விதம் செம.

படத்தின் நீளம் அதிகம். அதை கொஞ்சம் வெட்டி இருந்தால் இன்னும் அருமையாக அமைந்திருக்கும். காட்டுக்குள் இருக்கும் கிராமம், எமன் சிலை,நாற்காலி என ஆா்ட் டைரக்டா் ஏ.கே.முத்துவின் உழைப்பை பாராட்டியே தீர வேண்டும். அதுபோல படத்தில் ராமன், ராவணன் என்ற வசனங்கள் டிரைலரில் வருவது தியோரிட்டரில் குப்பன், சுப்பனனாக கட் செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற காட்சிகளை குறைத்திருந்தால் நன்றாக இருக்கும்.

கதையின் லாஜிக் பார்க்காமல் ஜாலியாக ஒரு பொழுது போக்கிற்காக மட்டும் சிரித்து விட்டு வரலாம்.