பிரபல கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ் அருண் இவர் கர்நாடக இசையில் வல்லவர், கர்நாடக இசை கீர்த்தனைகளை பாடுவதில் வல்லவர். மறைந்த மாமேதை பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்டோரிடம் நெருக்கம் உள்ளவர்.

இந்நிலையில் சனிக்கிழமை அன்று  சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளி ஆடிட்டோரியத்தில் இவரின் கிறித்தவ பாடல்கள் பாடும் இசைக்கச்சேரி நடக்க இருந்து அறிவிப்புகள் வெளியானது. இவருடன் இணைந்து நித்யஸ்ரீமகாதேவனும் பாடவிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல மசாலா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது.

இந்நிலையில் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் சில இந்து அமைப்புகளும் சில நண்பர்களும் கிறித்தவ பாடல்களை எப்படி கர்நாடிக் பாடகர்கள் அதுவும் ஹிந்து பக்தி பாடல்களை பாடும் பாடகர், பாடகிகள் பாடலாம் என்ற ரீதியில் விவாதங்கள் கடுமையாக எழுந்தது.

இருந்தாலும் நேரடி எதிர்ப்பில் யாரும் ஈடுபடவில்லை. மறைமுக எதிர்ப்பாக மட்டுமே இருந்தது.

இப்படி இருந்த நிலையில் சனிக்கிழமை நடப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. யாருடைய எதிர்ப்பும் இருந்ததா அல்லது அல்லது எதற்கு வம்பு என்று நினைத்தார்களா? இல்லை நிகழ்ச்சி நடத்துவதில் வேறு ஏதேனும் பிரச்சினையா என்று தெரியவில்லை.

இது இலவச நிகழ்ச்சியாக  நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.