Oththa Serupu Trailer – நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள ஒத்த செருப்பு திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவர் பார்த்திபன். எனவே, திரையில் காட்சிகளை புதுமையாகவும், வித்தியாசமாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. தற்போது அவர் இயக்கி நடித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படமும் வித்தியாசமான கதையை அடிப்படையாக கொண்டதுதான். திரைப்படம் முழுவதும் அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.