நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். வயது வந்தவர்களுக்கு மட்டுமான திரைப்படம் என்பது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த நடிகை ஓவியா பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸுடன் அவர் நடித்துள்ள காஞ்சனா 3 வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அதேபோல், அவர் நடித்த 90 எம்.எல். படமும் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

இப்படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கு குழு அதிகாரிகள் இப்படத்திற்கு வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே, இப்படத்தில் ஆபாசமான காட்சிகளூம், வசனங்களும் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் கொண்டாடி வரும் ஓவியாவின் ஒரு திரைப்படம் ‘A’ சான்றிதழ் பெற்றிருப்பது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படத்தில் ஒரு அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்ணாக ஓவியா நடித்துள்ளார். இப்படத்தை அனிதா உதூப் என்பவர் இயக்கியுள்ளார்.