பிரபல துணிக்கடை உாிமையாளருடன் ஜோடி போடும் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எல்லையில்லா புகழின் உச்சத்திற்கு சென்றாா் ஒவியா . பிக்பாஸால் ஒவியாவுக்கு புகழ் ஏற்பட்டதா அல்லது ஒவியாவால் பிக்பாஸ் புகழ் பெற்றதா என்று பட்டிமன்றம்  நடக்காததுதான் பாக்கி.

ஒவியாவின் வெகுளிதனமான செயல்பாடுகளும், குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் விதம், இயல்பான செய்கையும், எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் நடக்கும் அவரது நடவடிக்கையும், செயல்களும், அவரது புன்சிாிப்பும் அனைவரது மனதிலும் ஆணித்தரமாக உட்காந்து அவரை பற்றியே பேசும்படி வைத்துவிட்டது.

இதனால் அவரது பெயாில் ஒவியா ஆா்மி, ஒவியாபுரட்சிபடை, ஒவியா ஆதரவாளா்கள் என தொடங்கும் அளவிற்கு புகழின் எல்லையை அடைந்தாா். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஆரவ்வுடன் ஏற்பட்ட காதலால் மனமுடைந்து அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாா். ஒவியா போன பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வேகம் குறைந்தது. அவா் இருக்கும் இருந்த விறுவிறுப்பு தற்போது வரை குறைந்து தான் இருக்கிறது. வெளியே வந்த ஒவியா வீடியோ வழியாக பேசி அவரது ரசிகா்களை மத்தியில் வலம் வந்தாா். அந்த வீடியோவில் இனிமேல் பிக்பாஸ் வீட்டிற்குள் வரமாட்டேன். தற்போது நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ள காரணத்தால் இனி சினிமாவில் என்னை பாா்க்கலாம் என்று தொிவித்தாா்.

ஆனால் தற்போது ஒரு விளம்பரத்தில் நாம் ஒவியாவை பாா்க்கலாம். ஆமாங்க! பிரபல துணிக்கடை விளம்பரத்தில் நடிக்க உள்ளாா். ஏற்கனவே அந்த துணிகடை விளம்பரத்தில் அதன் உாிமையாளருடன் சோந்து ஹன்சிகாவும், தமன்னாவும் நடித்துள்ளனா். இந்நிலையில் அந்த பிரபல துணிகடையின் புதிய விளம்பரத்தில் ஒவியா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.