பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கோலிவுட்டில் ஓவியாவுக்கு மவுசு கொஞ்சம் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அவரை தங்களது படங்களில் நடிக்கவைக்க பல இயக்குனர்களும் போட்டி போடுகின்றனர். இந்நிலையில், சிவாவை வைத்து ‘தமிழ் படம்’ எடுத்த சி.எஸ்.அமுதன், ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அவரை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்தார்.

தற்போது ஓவியா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி வந்துள்ள நிலையில், ஓவியாவின் ரசிகர்கள் சி.எஸ்.அமுதனிடன் நீங்கள் சொன்னபடி உங்கள் படத்தில் ஓவியாவை நடிக்க வைப்பீர்களா? அப்படி நீங்கள் செய்தால் உங்கள் படம் நிச்சயம் ரூ.100 கோடி வசூலிக்கும் என்று உறுதிமொழி கொடுத்துள்ளனர். ஆனால், பதிலுக்கு சி.எஸ்.அமுதனோ உங்கள் தலைவி ஓவியாவை முதலில் போனை சுவிட்ச் ஆன் பண்ணி வைக்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த ‘தமிழ் படம்’ தமிழ் சினிமாவில் இடம்பெற்ற முக்கிய படங்களில் பிரபலமான காட்சிகள் நக்கல், நையாண்டியுடன் சொல்லியிருந்தது. அவரது இரண்டாவது படமான ‘ரெண்டாவது படம்’ முடிவடைந்து இன்னும் ரிலீசாகமல் உள்ளது. தற்போது ‘தமிழ் படம்’ இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளார். அந்த படத்தில்தான் ஓவியாவை நடிக்க வைப்பதாக அவர் கூறியிருந்தார்.