பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் எகிறியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வரிசையில் தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல், இவர் தனது சம்பளத்தை அதிகரித்துள்ளதால், ஏற்கெனவே இவர் நடித்த படங்களின் இரண்டாம் பாகங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.

இருப்பினும், ஓவியாவுக்கு மார்க்கெட் குறைந்தபாடில்லை. சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற பேய் படத்தில் நடித்துவரும் ஓவியாவுக்கு அடுத்ததாக மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்திற்கு ‘காட்டேரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தை ‘யாருமிக்க பயமே’ என்ற படத்தை இயக்கிய டி.கே. இயக்குகிறார். நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். காமெடி கலந்து பேய் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.