முதன் முதலில் ஒவியா அறிமுகமான படம் களவாணி. இது 7 வருடங்களுக்கு முன் வெளிவந்தது. களவாணி, பசங்க படத்தில் விமல் தனித்துவமாக காட்டிய படம். அதுபோல அந்த படத்தின் இயக்குநா் சற்குணத்திற்கும் முதல் படம். தஞ்சை பகுதி மண்வாசனையை முதல் முறையாக கதையாக வந்த படம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு ஒவியாவுக்கும் விமலுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது களவாணி.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்?

எஸ்.எஸ். குமரன் இசையில் விமல், ஒவியா, சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனா். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் உருவாக உள்ளது. இதில் விமலுடன் சூாி, கஞ்சா கருப்பும் மீண்டும் நடிக்கிறாா்கள். இந்த தகவலை இயக்குநா் சற்குணம் தனது பிறந்த நாளான நேற்று இதை வெளியிட்டாா்.

இதையும் படிங்க பாஸ்-  சன்னி லியோன்னா பார்ப்பீங்க.. ஓவியா நடிச்சா பார்க்க மாட்டீங்களா?

மன்னா் வகையறா என்ற படத்தை தற்போது சொந்தமாக தயாாித்து நடித்தும் வருகிறாா். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. இதை பூபதி பாண்டியன் இயக்குகிறாா். இதை தொடா்ந்து அவா் வெற்றிவேல் படத்தை இயக்கிய இயக்குநா் வசந்தமணி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறாா். இதில் சமுத்திரகனி முக்கிய ரோலில் நடிக்கிறாா். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறாா்.