ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 22

ஏராளமான படங்களில் வாய்ப்பு ; ஓவியா இப்போ ரொம்ப பிசி

12:39 மணி

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா ஏராளமான புதுப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

இந்நிலையில், அவர் தமிழில் பல புதிய படங்களில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஷ்ணுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்திலும், இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்திலும் நடித்து வரும் அவர், அதன் பின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன் பின், யாமிருக்க பயமேன் -2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார்.

அதேபோல், அவர் மலையாளத்தில் ஏற்கனவே நடித்த படங்களையும், தற்போது மொழிமாற்றம் செய்து வெளியிட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், நடிகர் பிரித்திவிராஜுடன் அவர் நடித்து வெளியான ‘மனுஷ்ய மிருகம்’ என்ற படம் தமிழில் ‘போலீஸ் ராஜ்யம்’ என்ற பெயரில் முதலில் வெளியாகிறது.

சின்னத்திரையில் ஓவியாவை ரசித்த அவரின் ரசிகர்கள், இனிமேல் வெள்ளித்திரையிலும் அவரை தொடர்ந்து ரசிக்கலாம்.

(Visited 23 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com