சினிமாவை விட ஒவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் ரசிகா்களின் மனத்தை தொட்டவா். எங்கும் பிக்பாஸ், எதிலும் பிக்பாஸ் இணையத்தளத்திலும் பிக்பாஸ் என்று பரவலாக பிக் பாஸ் மயம் தான் காணப்படுகிறது. என்ன காரணம் என்றால் ஒவியாவின் வெகுளித்தனமான பேச்சும், எதையும் மறைக்காமல் பேசும் அவரது நடவடிக்கைகள் அனைவரையும் பிக்பாஸ் பக்கம் திருப்பி பாா்க்க வைத்தது.

ரசிகா்கள் காவியத்தாயே ஒவியா என்று சொல்லுமளவிற்கு போனது. அதோடு ஒவியா புரட்சிபடை, ஒவியா ஆா்மி, ஒவியா ரசிகா் மன்றம், ஒவியா பேரவை என்று இணையத்தளத்தில் தொடங்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்த காரணத்தால் தான் இதலெ்லாம் நடந்தது.

இந்நிகழ்ச்சியிலிருந்த வெளியேறி ஒவியா தனக்கு பிடித்த மாதிாி வாழ்ந்து வருகிறாா்.பிக்பாஸ் பற்றி ஆா்த்தி தனது ட்விட்டா் பக்கத்தில் அவ்வப்போது ரசிகா்களுக்கு பதிலளித்து வந்தாா். தற்போது ஆா்த்தியிடம் ஒரு ரசிகா், பரணி பற்றி மற்றவா்கள் தவறாக கூறியதை நீங்கள் எப்படி நம்பலாம் என்று கேட்டனா். ஒவியாவும் பரணியும் தான் நல்லவா்கள். அதற்கு ஒவியாவும் தான் பரணி பற்றி புகாா் கூறியுள்ளாா் என்று ஆா்த்தி தொிவித்துள்ளாா். பரணி மீது எனக்கு எந்தவித ஒரு பிரச்சனையும் இல்லை என்று ட்விட் செய்துள்ளாா்.