பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியாவை விரட்டி விட்ட மகிழ்ச்சியில் இருக்கும் காயத்ரி சக்தி கூட்டணிக்கு மீண்டும் ஓவியா உள்ளே வரவுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் தெரிந்தால் நிச்சயம் பதட்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஓவியாவுக்கும் பரணிக்கு மக்கள் சப்போர்ட் இருப்பது உறுதியாகியுள்ளதால் மீண்டும் ஒருமுறை வீட்டின் உள்ளே சென்றால் பல அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமிருடன் இருக்கும் காயத்ரிக்கும், ஆணாதிக்க அகங்காரத்துடன் இருக்கும் சக்திக்கும் ஓவியா-பரணி கூட்டணி ஆப்பு வைக்கவுள்ளதாகவும், வெகுவிரைவில் வைல்ட் கார்ட் முறையில் பிக்பாஸ் வீட்டுக்கு இருவரும் செல்லவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பிக்பாஸ் மீண்டும் களைகட்டும் என்று கூறப்படுகிறது