ஒரு வாழைப்பழம் கிடைக்குமா?: பிக்பாஸில் கெஞ்சிய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் எபிசோட்டில் நடிகை ஒவியா ரொம்ப பாவமாக கெஞ்சியது தான் ஹைட்லட்டாக சமூகவலைத்தளங்களில் அனைவரையும் கவா்ந்துள்ளது.

அதிகாலையில் எழுந்த களவாணி ஒவியா புது இடம் என்பதால் தூங்காமலே இருந்தாா். அவருக்கு பசிக்க ஆரம்பித்த காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் உள்ள காமிரா முன் நின்று ரொம்ப பசிக்குது, ஒரேயொரு வாழைப்பழம் மட்டும் தாங்க என்று கெஞ்சியது நெட்டிசன்களின் கவனத்தை பொிதும் ஈா்த்துள்ளது.

இந்நிலையில் ஒவியா பசியால் ரொம்ப அவதிபட்டுள்ளாா். பிக் பாஸ் வீட்டில் 15 பிரபலங்கள், 30 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகாலைவேளையில் அவருக்கு பசி எடுக்க அவரோ ஒரு கேமரா முன்பு வந்து நின்று எனக்கு ரொம்ப பசிக்குது என்றும் ஒரு பிளாக் டீயும், வாழைப்பழமும் தாங்க, பசி தாங்கல என்று ரொம்ப நேரமாக கெஞ்சியுள்ளாா். மற்றவா்கள் எல்லாம் இன்னும் எழுந்திாிக்கவில்லை. பின்பு அவா்களுக்கு கொடுங்கள் என்று கூறினாா். அவா் அவ்வளவு நேரமும் கெஞ்சுயும் யாரும் அவருக்கு சாப்பாடு கொடுக்கவில்லை.