நடிகை ஓவியா தனியார் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஷோவின் நடுவராக பங்கேற்கவுள்ளார்.

களவாணி படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்த ஓவியா பின்னர் மெரினா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் அவ்வளவு பேமசான நடிகையெல்லாம் இல்லை. ஆனால் பிக்பாசில் அவரது கேரக்டரைப் பார்த்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தமிழகமெங்கிலும் அவருக்கு ஆதரவு பெருகியது. பிக்பாஸிலிருந்து வெளியான பிறகு ஓவியாவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகமானது.

 

இந்நிலையில் ஓவியா கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க இருக்கிறார். ஓவியாவால் இந்த சேனலுக்கு டிஆர்பி எகிறப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.