பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஓவியா, சினிமாவில் நடிப்பதை தவிர்க்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த ஓவியா, ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயன்று, நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறிவிட்டார். ஆனால், அவரில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் பார்க்க மாட்டோம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா தனது முடியை வெட்டி ஒரு புதிய சிகையலங்காரத்தை செய்திருந்தார். அந்த புகைப்படங்கள் வெளியானது. மேலும், கேரளாவில் உள்ள அவரின் தோழியும், நடிகையுமான ரம்யா ரம்பீசன் வீட்டிற்கு சென்று அவர் ஓய்வு எடுப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், அவரை தனது படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயற்சித்தனர். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது. தமிழ்படம் எடுத்த இயக்குனர் சி.எஸ். அமுதன் தமிழ்படம் 2ம் பாகத்தில் அவரை நடிக்க வைப்பதாக கூறினார். மேலும் தனத் டிவிட்டர் பக்கத்தில் ‘உங்க தலைவியை போன எடுக்க சொல்லுங்கப்பா’ என டிவிட் செய்திருந்தார்.

ஆரவ் மீது கொண்ட காதல் தோல்வி அடைந்ததில் இருந்து ஓவியா இன்னும் வெளியே வர முடியாமல் தவிக்கிறார் எனவும்  அதனால்தான், படங்களில் நடிப்பதை தவிர்க்க தனது முடியை வெட்டிக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இப்படியே போனால் அனைத்து பட வாய்ப்புகளையும் அவர் இழந்து விடுவார் எனத் தெரிகிறது.