எல்லை மீறும் ஓவியா?: விரக்தியில் ஆர்மி

பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் தற்போது பரபரப்புக்கு பஞ்சமில்லை. சக்தி,சினேகன்,காயதிர் ஆகியோர் மூவ்ர் அணி போல செயல்படுகிறது. ஜூலி வழக்கம்போல ரசிசாவிடம்  நெருங்கி வருகிறார். மிகவும் நெருக்கமாக காணப்பட்ட ஆரவ் ஓவியா ஜோடி பிரிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே ஓவியாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. எத்தனை முறை வேண்டுமானாலும் எலிமினேஷன் செய்யுங்கள் நாங்கள் அவரை வாக்குகள் மூலம் வெற்றிபெற வைப்போம் என்று ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இவற்றிற்கு எல்லாம் காரணம் ஓவியாவின் நேர்மையான செயல்பாடுகள்மட்டுமே.

ஆனால் தற்போது ஓவியா தனது நற்பெயரை தானே கெடுத்துக் கொள்வாரோ என்று தோன்றுகிறது. காரணம் நேற்று நடந்த கூத்துகள்தான்.நேற்றைய நிகழ்ச்சியில்  ஓவியா ஆரவ்வின் படுக்கையில் போய் படுக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே சென்று அவரின் போத்திக்கொண்டிருந்த போர்வைக்குள் புகுந்து படுக்க முயற்சிக்கிறார். இதனை விரும்பாத ஆரவ் அங்கிருந்து செல்கிறார். மேலும் ஆரவின் போர்வையை முகர்ந்து பார்த்த ஓவியா. வாசம் சூப்பரா இருக்கு. இது தான் உன் வாசனையா? ((பெர்ப்யூம் வாசனையை சொல்லியிருக்கலாம்))என்று சத்தமாக கேட்கிறார்.

இதனால் கோபமடைந்த ஆரவ் ஷக்தி மற்றும் சினேகனிடம் ஓவியாவை குறை சொல்கிறார். இந்த காட்சிகள் தொலைக்காட்சியில்  எப்படி ப்ரொஜக்ட் ஆகும்ன்னு தெரியல என்று புலம்புகிறார்.

மேலும், பிக்பாஸுடன் முறையிடுகிறார். அப்போது பிக் பாஸ், இது உங்களுடைய தனிப்பட்ட விஷயம் இதனை ஓவியாவுடன் பேசுங்கள். மற்றவர்களுடன் பேசினால் இந்த பிரச்னை மேலும் பெரிதாகும் என கூறி ஆரவ்-வை அனுப்பி வைக்கிறார்.

இந்த நிகழ்வுகள் ஓவியாவின் மேல் உள்ள நற்பயரை இழக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஒரு வேலை ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்காக இவ்வாறு செய்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது. ஆனால் இந்த சம்பவத்தால் ஓவியா ஆர்மிகள் என்ன  நடக்கிறது என்று குழப்பத்தில் உள்ளனர்.