ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. வசூல் ரீதியாகவும் இந்த படங்கள் பல்வேறு சாதனைகளை படைத்தது. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது ‘முனி’ படத்தின் 4-ம் பாகமாக ‘காஞ்சனா-3’ என்ற பெயரில் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஓவியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருடன் இன்னும் 2 நாயகிகள் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக தேடுதல் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றபடி, ‘முனி’ படத்தின் மூன்று பாகங்களிலும் நடித்த கோவை சரளா, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். முதல் இரு பாகங்களில் நடித்த தேவதர்ஷினியும் இப்படத்தில் இணையவிருக்கிறார்.

இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்கி நடிக்கவிருக்கிறார். விரைவில், மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.