பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

ஆனால், லைவ் சேட் அதவது ரசிகர்களுடன் அவர் நேரடியாக உரையாட வேண்டும் என அவரின் பல ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை அதற்கு ஓவியா சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ லைவ் சேட் செய்ய வேண்டும் என என்னிடம் பலர் கேட்கின்றனர். எனக்கும் ஆவலாகவும், ஆசையாகவும் இருக்கிறது. பிக்பாஸ் 100 நாட்கள் முடிந்த பின் கண்டிப்பாக நாம் பேசுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் குஷியாகி, அதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.