ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் பங்கேற்றுள்ளனர். 17வது நபராக ஓவியா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் போட்டியாளரக இல்லாமல் ஒரு விருந்தினராக மட்டுமே அனுப்பட்டார்.இது உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கு தெரியாது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஓவியா நுழைந்ததும் சக போட்டியாளர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை. அனைவருடைய முகத்திலும் ஒரு அதிர்ச்சி தெரிந்தது. காரணம் பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியாவின் செல்வாக்கு எப்படி இருந்தது என்பதை அவர்கள் அனைவரும் நனகு அறிந்திருந்தனர். காரணம் இந்த போட்டியிலும் அவர் வந்துவிட்டாரே? இனி எல்லோரையும் இவர் காலி செய்துவிடுவார் என்ற எண்ணமாக இருந்திருக்கலாம். இவர் போட்டியாளர் இல்லை விருந்தினர் மட்டுமே என்பது தெரிந்தபின்னரே மற்ற போட்டியாளர்கள் நிம்மதி அடைவார்கள் என்பது மட்டும் உண்மை.

Loading...