ஓவியா இருட்டடிப்பு ; களவானி படம் பார்க்க போய்விடுவோம் – ரசிகர்கள் எச்சரிக்கை

விஜய் தொலைக்காட்சியில் இடம் பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஓவியா ரசிகர்கள் இணையத்தில் பொங்கி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் நடிகை ஓவியா. ஒரு கடினமான சூழ்நிலையை அவர் அணுகும் முறை, எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் முகம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் காரணமாக பலருக்கும் அவரை பிடித்திருக்கிறது. இணையத்தில் அவருக்கு 80 சதவீத ஓட்டுகள் விழுகிறது எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் அவர் அழுவது போல் வீடியோ வெளியானதும், ஓவியா பேரவை , ஓவியா புரட்சிப்படை, ஓவியா ஆர்மி என உருவாக்கி அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்தனர். அவரை அழ வைத்த காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோருக்கு எதிராக மீம்ஸ்களையும் கருத்துகளையும் பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஓவியாவை ஒதுக்கிவிட்டு, காயத்ரியை முன்னிறுத்தும் காட்சிகள் மட்டும் இடம் பெறுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இப்படியே செய்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் எனவும், அதற்கு பதிலாக நாங்கள் ஓவியா நடித்த ‘களவாணி’ படத்தை பார்க்க போய்விடுவோம் எனவும் ஓவியா ஆர்மியினர் சமூக வளைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.