பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவின் காதலை ஏற்காமல் தவிர்த்து வரும் ஆரவிற்கு எதிராக, ஓவியாவின் ரசிகர்கள் இணையத்தில் பொங்கி எழுந்துள்ளனர்.

ஆரவ் மீது ஈர்ப்பு இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், நேற்றுதான் அவரை காதலிப்பதாக ஓபனாக எல்லோரிடமும் போட்டு உடைத்தார் ஓவியா. மேலும், ஆரவை கட்டிப்பிடிக்க பலமுறை முயன்றார். ஆனால், அவரின் நோக்கத்தை புரிந்த ஆரவ், நாம் நண்பர்கள் மட்டுமே என பலமுறை கூறினார். ஆனாலும், ஓவியாவிற்கு அது புரிந்தமாதிரி தெரியவில்லை.

ஆனால், இதுவரை ஓவியாவிடம் நெருக்கமாக பழகியவர்தான் ஆரவ். இங்கு இருப்பதிலேயே நீ ஒருவன்தான் என்னிடம் நெருக்கமாக இருக்கிறாய் என ஓவியா பலமுறை ஆரவிடம் கூறியிருக்கிறார். ஆனால், மக்கள் இதை பார்த்துக் கொண்டிருப்பதால், தன்னுடைய சினிமா வாழ்க்கை பாதிக்கும் என திடீர் ஞானோதயம் ஏற்பட்டதால், ஓவியாவை தவிர்க்க முயல்கிறார் ஆரவ்.

இந்நிலையில், ஓவியாவை அணைத்தபடி ஆரவ் நடந்து வரும் புகைப்படம், ஓவியாவின் பின்புறத்தில் காலால் உதைப்பது போன்ற புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டு, ஓவியாவிடம் ரொமான்ஸ் செய்து விட்டு இப்போது நடிக்கிறார் ஆரவ் என அவரை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.