கமல் படத்தில் நடித்ததற்காக வேதனைப்பட்ட ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை பிடித்திருப்பவர் நடிகை ஓவியா. காரணம் அவரது இயல்பான அணுகுமுறை. தற்போது அவருக்கு கிடைத்துள்ள ரசிகர் வட்டாரம் நம்பர் ஒன் நடிகை நயன்தாராவை விட அதிகம்தான்.  சரி விசயத்திற்கு வருவோம். ஓவியா கமலுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது தெரியுமா?  கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மன்மதன் அம்பு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்திற்காக ஓவியா சம்பந்தமாக பல காட்சிகள் எடுத்திருந்தாலும், படத்தில் ஒரே காட்சியில்  மட்டும் துணை நடிகை லெவலில் வந்து செல்வார்.

எல்லா விசயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசும் ஓவியா இது குறித்து பேசாமல் இருப்பாரா? தனது வேதனையை அப்போதே அவர் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியபோது, மன்மதன் அம்பு படத்தில் கமல் சாருக்காக மட்டுமே நடிக்க சம்மதித்தேன். நான் கமல் சார் கூட இருந்த ஒரு காட்சியாவது படத்துல வெச்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் ஒரு சின்ன சீன் கூட படத்தில் இல்லை. சரி நான்  நடித்த காட்சிகளையாவது வைத்திருக்கலாம் . ஆனா, இரண்டு காட்சியில தான் நான் வர்றேன். அதுவும் மாதவனுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கிற கேரக்டர் மாதிரி என்னைக் காட்டினது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இந்தப் படத்துல கமிட் ஆனதுக்கு வருத்தப்படுற அளவுக்கு என்னைக் கொண்டுவந்துட்டாங்க என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு அதாவது உண்மைக்கு ஆதரவாக இருப்பவர் கமல்ஹாசன் மட்டுமே.