ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

என் அடுத்த படத்தின் ஹீரோயின் ஒவியாதான்: ‘தமிழ்ப்படம்’ சி.எஸ்.அமுதன்

12:53 மணி

இயக்குனர் சி.எஸ்.அமுதன் கடந்த 2010ஆம் ஆண்டு ‘தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கினார். மிர்ச்சி சிவா நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஏழு வருடங்கள் கழித்து ‘தமிழ்ப்படம் 2.0’ என்ற பெயரில் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும், திஷா பாண்டே மீண்டும் இந்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இயக்குனர் சி.எஸ். அமுதன் தனது டுவிட்டரில், ‘இந்த படத்தின் நாயகியாக ஓவியாவை நடிக்க பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஓவியா இதற்கு ஒப்புக்கொண்டால் நான் தயார்’ என்று பதிவு செய்துள்ளார்.

ஆனால் ஓவியா வெளியே வந்தவுடன் அவருக்கு அஜித், விஜய், சூர்யா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் ஏற்கனவே ‘கலகலப்பு’ படத்தில் அவர் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 29 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393