எனக்கும் ஆசைதான்! ஆனால் ஓவியா ஆர்மி திட்டுவாங்களே! கருணாகரன்

பத்து படங்களில் நடிக்காத புகழ் ஒரே ஒரு டிவி ஷோவில் ஓவியாவுக்கு கிடைத்துவிட்டது. எங்கு பார்த்தாலும் ஓவியா, ஓவியா என்ற பேச்சுதான் தமிழகத்தில் உள்ளது. குடும்பத்தலைவிகளே சீரியல்களை மறந்து பிக்பாஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் ஓவியா வின்னராக வெளியே வந்தவுடன் அவரை ஹீரோயினியாக புக் செய்ய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வரிசையில் நிற்பார்கள் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் ஓவியாவை புக் செய்ய கருணாகரன் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து கருணாகரனிடம் கேட்டபோது, ‘எனக்கு ஆசைதான், ஆனா ஓவியா ஆர்மியினர் திட்டுவாங்களே! என்று பதில் கூறியுள்ளார்.