ஓவியாவிடம் கேள்வி கேட்க தயாராகுங்கள் ரசிகர்களே!

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கன்னாபின்னா என்று பிரபலம் ஆனது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவரது பெயரில் ஓவியா படை, ஓவியா ஆர்மி என்று ஆரம்பிக்கப்பட்டு டுவிட்டரே பரபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஓவியா அறிவித்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி இரவு 8 மணிக்கு #AskOviyaSweetz என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இந்த ஒரே ஒரு டுவிட்டுக்கு 16 ஆயிரம் லைக்ஸ்களும், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரீடுவீட்டுக்களும் கிடைத்துள்ளன. முன்னணி நடிகர்களின் டுவீட்டுகளுக்கு கூட இந்த அளவு வரவேற்பு கிடைத்திருக்குமா? என்பது கேள்விக்குறியே