பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை – ஓவியா ஓபன் டாக்

பிக்பாஸ் வீட்டிலிருந்து மனநிலை காரணமாக வெளியேறிய நடிகை ஓவியாவிடம் மீண்டும் அந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ஓவியா தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, நேற்று நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை தி. நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

அதன் பின் அவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, பல உளவியல் மற்றும் மனநல ஆலோசகர்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்கியதாகவும், ஆனால், ஓவியாவிடம் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்பட்டது. மேலும், அந்த நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்வதை அவர் விரும்பவில்லை எனக்கூறப்பட்டது

எனவே, நிகழ்ச்சிக்கு குட்பை கூறும் மனநிலையில் இருந்த ஓவியா, இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுடன் அவர் தோன்றி, தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்வார் எனவும் செய்தி வெளியானது.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ஓவியா “பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது உண்மைதான். மீண்டும் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள என்னிடம் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” எனப் பேட்டி அளித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஓவியா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.