பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களை கவர்ந்துள்ளது என்றால் அதற்கு 100% ஓவியா மட்டுமே காரணம். சனி, ஞாயிறு மட்டும் இதில் கமலுக்கு கொஞ்சம் பங்கு உண்டு.

இந்த நிலையில் காதல் தோல்வியால் மனமுடைந்த ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனால் ஓவியாவை பரிசோதித்த மனநல மருத்துவர் உடனே அவரை வெளியே அனுப்பி சிகிச்சை தர வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை ஓவியா வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி காரில் செல்லும் ஸ்டில் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும் இந்த நிகழ்ச்சியை இனி பார்க்க போவதில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது