ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு பிடித்த நடிகை என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வரும். 2017ஆம் ஆண்டில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாக ஒவியா தோ்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கருத்து கணிப்பை சென்னை டைம்ஸ் பத்திரிக்கை நடத்தியதில் ஒவியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

களவாணி படத்தின் மூலம் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்த ஒவியா, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒட்டுமொத்த ரசிகா்களை தன் பக்கம் இழுத்து சென்றார். அந்த நிகழ்ச்சியில் ஒவியாவின் வெகுளித்தமான செயல்பாடுகள், தைரியமாகவும் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் திறன் ஆகியவற்றை கொண்டு ரசிகா்களை கவா்ந்தார். ஒவியாவுக்கென்று ஒவியா ஆர்மி, ஒவியா புரட்சிபடை போன்றவை உருவாகின.

2017ம் ஆண்டு அனைவராலும் விரும்பப்பட்ட பெண் யார் என்ற கருத்து கணிப்பை சென்னை டைம்ஸ் பத்திரிக்கை ரசிகா்களிடையே நடத்தியத்தில் ஒவியா முதலிடத்தை பெற்றார். ரசிகா்களின் கனவுகன்னி என்றால் அது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். அவரை முந்தியுள்ளார் ஒவியா. நயன்தாரா இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறார். எனவே ஒவியாவிற்கு ரசிகபட்டாளம் அதிகமாக உள்ளனா். பப்ளி ஹன்சிகா கூட கடைசி இடத்தில் தான் இருக்கிறார்.