காதலுக்கு குட்பை கூறிய ஓவியா – டிவிட்டரில் அறிவிப்பு

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, ஆரவ் மீது காதல் கொண்டார் ஓவியா. தொடக்கத்தில் அவருடன் நெருக்கமாகவே இருந்தார் ஆரவ். ஆனால், திடீரென ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார். தான் நட்பாகத்தான் பழகுகிறேன் என ஓவியாவிடம் அவர் கூறினார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த ஓவியா, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். மேலும், தன்னுடைய காதலை மீண்டும் நான் பெறுவேன். ஆரவை இப்போதும் நேசிக்கிறேன் என ஓவியா கூறினார்.

ஒருபக்கம், ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்ததை ஆரவ் ஒப்புக்கொண்டார். எனவே, பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆரவ் வெளியேறியதும், அவர் ஓவியாவை சந்திப்பார் என எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், காதலை கைவிட்டு விட்டதாக ஓவியா கூறியுள்ளார்.

இவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஓவியாவின் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்து அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.