Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை

பிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கி கிடைத்த வரவேற்ப்பை அடுத்து சீசன் 2 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதோ விடை கிடைத்துவிட்டது. அனேகமாக ஜூன் மாதம் பிக்பாஸ் 2 தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாராம். காரணம் அவரது அரசியல் ஓட்டு வேட்டைக்கு பிக்பாஸ் களம் ஒரு அருமையான வாய்ப்பு என்பதை உணராதவரா அவர்.

 

இந்த 2வது சீசனில் யார் யார் பங்கு பெறுவார்கள் என்று தெரியுமா?. ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவிடம் தொலைக்காட்சி நிர்வாகம் பேசி வைத்துள்ளனராம். ஆனால் அவர்களிடமிருந்து பாசிட்டிவான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சீசன் 1ல் பங்கு பெற்றவர்களில் ஓவியா மட்டும் உள்ளே வருவார் என்று தெரிகிறது.