பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ஓவியா சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாக கூறிக்கொண்டு வலம்வந்த சம்பவங்கள் அனைவர் மத்தியிலும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் எல்லாம் கமலையே ரொம்பவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், கடைசிவரை ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில், மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு சென்றுவிட்ட ஓவியா, பிக்பாஸ் வீட்டுக்குள் தன்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

வெளியே வந்தபிறகும் தான் ஆரவ்வை காதலிப்பதாகவும், அவருக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்றும் கூறிக் கொண்டே வந்தார். இந்நிலையில், இந்த நிலையில் இருந்து தற்போது ஓவியா மாறியிருப்பதுபோல் தெரிகிறது. ஏனென்றால், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், தற்போது தான் சிங்கிளாக இருப்பதாகவும், இதுவே தனக்கு திருப்தியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது ஆரவ் மீதுள்ள காதலை ஓவியா தூக்கிப் போட்டுவிட்டது போல் தெரிகிறது. தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருவதே அவரது மனநிலையை மாற்றியிருக்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.