ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த ஜுலிக்கு, வீட்டுக்குள் அவர் நடந்துகொண்ட விதம் பலரையும் அவர்மீது முகம் சுளிக்க வைத்தது. ஒவ்வொருவரை பற்றியும் மற்றவரிடம் புறம் பேசி தன்னுடைய நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார். இதனால், அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி பிறகு எங்கு சென்றாலும், மக்கள் அவரை கடுமையாக வசை பாடினர்.

          அப்படித்தான், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜுலியை, ஓவியாவின் ரசிகர்கள் பேசவிடாமல் அவமானப்படுத்தி துரத்தியடித்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலவாறாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஓவியா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அதாவது, இனி ஜுலியை பற்றி யாரும் தவறாக பேசவேண்டாம்.

           அவரிடம் தவறாக நடக்காதீர்கள். அவர் பாவம் என்று கூறியுள்ளார். தன்னை துச்சமாக எண்ணிய ஜுலியின் மீதே கருணை கொள்ளும் ஓவியாவின் இந்த நடவடிக்கையால் நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் வட்டம் கூடிக்கொண்டே செல்கிறது.