மீண்டும் வந்துவிட்டார் ஓவியா! இதோ ஆதாரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய ஓவியா மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் டிவி நிர்வாகத்தினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையின்படி அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்ததாகவும் வெளிவந்த செய்தியினை சற்று முன்னர் பார்த்தோம்

இந்த நிலையில் சினிமா ஊடகம் ஒன்றில் கமல்ஹாசன் மற்றூம் ஓவியா உரையாடும் ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இருந்தே அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார் என்பதை உறுதி செய்கிறது.

இந்த உரையாடல் குறித்த காட்சி இன்று ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது