பிக்பாஸ் வீட்டில் ஓவியா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைவரும் அறிந்ததே. ஆரவ் மீது காதல் வயப்பட்டதால் ஏற்பட்ட மன உளச்சலால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரே அந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியேறினார். தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் பிக்பாஸ் செட்டில் சென்று விசாரணை நடத்தியதாக தெரிகிறது. ஓவியாவின் வெளியேறிய பின் நிகழ்ச்சியை பார்ப்போர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவருகிறது என கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஓவியா தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாலாஜி என்பவர் காவல் நிலையம் சென்று விளக்கம் கேட்டார். அப்போது போலீஸார் கூறுகையில், ஓவியாவிடம் விசாரணை நடத்தியதாகவும், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களை ஏமாற்றவே  தற்கொலைக்கு முயற்சி செய்ததாக ஓவியா கூறியதாக போலீஸார் தெரிவிததனர் என்று பாலாஜி கூறியுள்ளார்