பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் வட்டம் பெருகிக் கொண்டே செல்கிறது. பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகைச்  சேர்ந்த பிரபலங்களும் ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  சமூக வலைதளங்களில் ஓவியா ஆர்மி என்ற குழு துவங்கப்பட்டு ஓவ்வொரு வாரமும் எலிமினேசன் செய்யப்படும் ஓவியாவை அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெற வைப்பதுதான் இவர்களது பணி.

இந்த நிலையில் தற்போது ஓவியா தற்கொலைப் படையை இயக்குனர் ஒருவர் துவக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளாது. டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் அந்த படையின் தலைவராம். இதனை அவரே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் , ஓவியா ஆர்மி தற்கொலை படை தலைவர் நான்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆரவையும் கண்டித்துள்ளார். ஓவியா ஆர்மி,ஓவியா புரட்சிப் படை இப்போது தற்கொலைப்படை . ஓவியாவை அரசியலுக்கு இழுக்காமல் ஓய மாட்டீங்க போல.